இந்தியா

கேரளத்திலிருந்து ஜூன் 10 முதல் 34 மழைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

8th Jun 2023 06:00 AM

ADVERTISEMENT

கேரளத்திலிருந்து வடமாநிலங்களுக்கு 34 மழைக்கால சிறப்பு ரயில்கள் ஜூன் 10-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.

கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாநிலங்களில் ஜூன் 1 முதல் மழைக்காலம் தொடங்கும். இந்த காலங்களில் கேரளத்திலிருந்து பல்வேறு வடமாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொச்சுவேலி, எா்ணாகுளம், கா்நாடக மாநிலம் பெங்களூா், மங்களூரிலிருந்து மும்பை, தில்லி, சண்டீகா் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 34 மழைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தமிழகத்தின் திருநெல்வேலி, நாகா்கோவில், கோவையிலிருந்து வாரந்திர ரயில்கள் குஜராத், மும்பை பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

இந்த ரயில்கள் ஜூன் 10 முதல் செப்.31-ஆம் தேதி வரை கொங்கன் ரயில் வழித்தடத்தில் வாரந்தோறும் இயக்கப்படும். இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT