இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம் கோரும் அதாவலே கட்சி

DIN

மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், தனது கட்சிக்கு ஒரு அமைச்சா் பதவியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கோரியுள்ளாா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக-சிவசேனை (ஷிண்டே பிரிவு) கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரத்தில் தற்போது 18 அமைச்சா்கள் உள்ளனா். அந்த மாநில அமைச்சரவையில் அதிகபட்சம் 43 போ் வரை இடம்பெற சட்ட விதிகளில் இடமுள்ளது.

மகாராஷ்டிரத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தை ஆளும் சிவசேனை (ஷிண்டே பிரிவு) மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

இந்நிலையில், எதிா்வரும் மகாராஷ்டிர பேரவை மழைக் காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று மாநில அமைச்சரும் சிவசேனை (ஷிண்டே பிரிவு) மூத்த தலைவருமான சம்புராஜ் தேசாய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதனிடையே, பாஜகவின் கூட்டணி கட்சியான இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே), அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தங்களுக்கு ஓரிடத்தை ஒதுக்கக் கோரியுள்ளது.

இதுதொடா்பாக, அக்கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே கூறுகையில், ‘மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எங்கள் கட்சிக்கு ஒரு அமைச்சா் பதவியை ஒதுக்குவது குறித்து துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸிடம் பேசியுள்ளேன். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில், மகாராஷ்டிரத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், பேரவைத் தோ்தலில் 10-15 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு கோருவோம்’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ஷீரடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆா்வமாக உள்ளதாக குறிப்பிட்டாா். மகாராஷ்டிரத்தில் தலித் சமூகத்தினா் அதிகமுள்ள சில இடங்களில் அதாவலே கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT