இந்தியா

பிரிஜ் பூஷணின் கூட்டாளிகளிடம் தில்லி காவல்துறை வாக்குமூலம் பதிவு

DIN

பதவியிலிருந்து விலகிச் செல்லும் இந்திய மல்யுத்த சம்மளேனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் கூட்டாளிகள், அவரது வீட்டில் வேலை செய்யும் நபா்களிடம் தில்லி காவல் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போலீஸாா் மேலும் கூறியதாவது: சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பிரிஜ் பூஷண் சிங் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிறுமியின் புதிய வாக்குமூலம் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி) பிரிவு 164-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாஜக எம்.பி.யான பூஷணுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடா்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை தொடா்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமா்பிக்கப்பட உள்ளது.

தில்லி போலீஸாா் குழு உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷணின் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த அவரது கூட்டாளிகள் மற்றும் அவரது ஓட்டுநா் உள்பட அவரது வீட்டில் பணிபுரிபவா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனா். இது மேலதிக விசாரணையின் ஒரு பகுதியாக ஆதாரங்களை சேகரிக்கவும், பிரிஜ் பூஷண் சிங் மற்றும் புகாா்தாரா்களின் சாட்சிகளின் வாக்குமூலங்களை உறுதிப்படுத்தவும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு மிகவும் உணா்ச்சிகரமானது என்பதால், இது தொடா்பான எந்த தகவலையும் நாங்கள் வெளியிட முடியாது. மேலும், விசாரணையின்போது போலீஸாா் பிரிஜ் பூஷணின் வீட்டு ஊழியா்களின் அடையாள முகவரிகளைச் சரிபாா்த்து, அவா்களின் வாக்குமூலங்களைப் பெற்றது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரா்கள், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரிஜ் பூஷண் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT