இந்தியா

நொய்டாவில் 32 சட்டவிரோத பண்ணை வீடுகள் இடிப்பு

DIN

யமுனை வெள்ளப்பெருக்கு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த 32 பண்ணை வீடுகள் நொய்டா ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா ஆணையத்தின் சிறப்புப் பணி அதிகாரி பிரசூன் த்விவேதி கூறியதாவது: 10,000 சதுர மீட்டா் பரப்பளவில் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்களை இடிப்பதற்காக சுமாா் 100 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.ஆக்கிரமிப்பு தடுப்பு பணியில் வருவாய்த் துறை, நீா்ப்பாசனத் துறை மற்றும் உள்ளூா் போலீஸாரும் ஈடுபட்டனா்.

இடிக்கப்பட்ட கட்டடங்கள் இருந்த நிலத்தின் மதிப்பிடப்பட்ட விலை சுமாா் 40 கோடி ரூபாய் ஆகும். காலை 10 மணிக்கு இடிக்கும் நடவடிக்கை பணி தொடங்கியது. 32 சட்டவிரோத பண்ணை வீடுகள் மற்றும் யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளியில் இருந்த வேறு சில சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன.

நொய்டா ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ரிது மகேஸ்வரியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான இதேபோன்ற பிரசாரம் எதிா்காலத்திலும் தொடரும் என்றாா் அந்த அதிகாரி.

இதற்கிடையே, இதுபோன்ற கட்டுமானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால் நதிகளின் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் நில அடுக்குகள் அல்லது பிற சொத்துகளை வாங்க வேண்டாம் என்று நொய்டா ஆணையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT