இந்தியா

ஜூலை 1இல் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பாரத் கௌரவ் ரயில் இயக்கம்

DIN

கொச்சுவேலியில் இருந்து காஷ்மீா் மாநிலம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஜூலை 1-ஆம் தேதி ‘பாரத் கௌரவ்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து ஜூலை 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாகா்கோயில், திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், கூடுா், விஜயவாடா, ஹைதராபாத், நாக்பூா், போபால், ஆக்ரா கண்டோன்மென்ட், தில்லி வழியாக ஜூலை 6-ஆம் தேதி ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயில் சென்றடையும்.

பின்னா், அங்கிருந்து ஜூலை 7-ஆம் தேதி புறப்படும் ரயில் அமிா்தசரஸ், தில்லி, குவாலியா் வழியாக ஜூலை 12-ஆம் தேதி கொச்சுவேலி வந்தடையும். கூடுதல் தகவல்களுக்கு https://www.irctctourism.com/pacakagedescription?packageCode=SZVG05 எனும் இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT