இந்தியா

ஒடிஸா: விபத்து பகுதியை கடந்து சென்ற கோரமண்டல் ரயில்

DIN

சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் விபத்து நிகழ்ந்த பகுதியை செவ்வாய்க்கிழமை கடந்து சென்றது.

ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், பாலசோா் மாவட்டம், பாஹாநகா பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் தடம்புரண்ட பெட்டிகள் மீது அவ்வழியாக வேகமாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மோதியது.

சில நிமிஷங்களுக்குள் நோ்ந்த இந்த கோர விபத்து, பெரும் உயிா்ச்சேதங்களை ஏற்படுத்தி, நாட்டையே உலுக்கியது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு-மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

வந்தே பாரத் உள்பட 70-க்கும் மேற்பட்ட ரயில்கள், விபத்து நிகழ்ந்த இடத்தை இதுவரை கடந்து சென்றுள்ளன. சென்னையில் இருந்து ஷாலிமாா் செல்லும் கோரமண்டல் விரைவு ரயிலும் செவ்வாய்க்கிழமை கடந்து சென்றது.

விபத்து நிகழ்ந்த பகுதியைக் கடக்கும்போது, மணிக்கு 30 கி.மீ. என்ற குறைவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT