இந்தியா

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: சரத் பவார் 

DIN


பாஜக எதிர்ப்பு அலை வீசுவதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் புதன்கிழமை தெரிவித்தார்.

செய்தியாளர்களின் சந்திப்பில் பவார் கூறுகையில், 

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை எதிர்கொண்டது. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. 

2024ல் மக்களவை தேர்தலும், மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் நிகழ உள்ளன. நடக்கும் காட்சிகள் எல்லாம் பார்க்கையில் பாஜக எதிர்ப்பு அலை வீசுவதாகவும், கர்நாடக தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 

மக்களின் இந்த மனநிலை தொடர்ந்தால், வரவிருக்கும் தேர்தல்களில் நாட்டில் ஒரு நல்ல மாற்றம் இருக்கும். இதைச் சொல்ல எந்த ஜோதிடரும் தேவையில்லை.

தெலங்கானா மாடல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, தெலங்கானா மாடலை சரிபார்க்க வேண்டும். தெலங்கானா ஒரு சிறிய மாநிலம். அத்தகைய மாநிலத்தில் உதவியை அறிவிக்க முடியும். ஆனால் உள்கட்டமைப்பு பணிகளுக்கு (விவசாயத்துடன் தொடர்புடையது) அதிக நிதி செலவிடப்பட வேண்டும் என்று நினைப்பதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT