இந்தியா

மல்யுத்த வீரர்களை மீண்டும் பேச்சுக்கு அழைத்த மத்திய அமைச்சர்!

7th Jun 2023 11:03 AM

ADVERTISEMENT

மல்யுத்த கூட்டமைப்புத் தலைவா் பிரிஜ்பூஷண் சிங் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு விவகாரம் தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

மல்யுத்த கூட்டமைப்புத் தலைவா் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய வீரா்கள் தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்கள் மீது காவல் துறையினா் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவா்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரா்கள் சந்தித்தனர். 

இதையடுத்து, திங்கள்கிழமை காலை மல்யுத்த வீரர்கள் வகிக்கும் ரயில்வே பணிகளில் திரும்பவும் இணைந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த வீரர்கள், “ரயில்வே துறையில் தாங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல்சாா் பணிகளை நிறைவேற்றவே பணியில் இணைந்ததாகவும், பிரஜ் பூஷணை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு ஏஎன்ஐ-க்கு பதிலளித்துள்ள சாக்ஷி மாலிக், போராட்டம் நடத்திய அனைத்து வீரர்களுடனும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT