இந்தியா

தீவிரப் புயலாக மாறவிருக்கும் பிபர்ஜாய்: பெயருக்கு ஏற்றார் போல இருக்குமா?

7th Jun 2023 11:35 AM

ADVERTISEMENT

புது தில்லி: இந்த ஆண்டில் அரபிக் கடலில் உருவாகியிருக்கும் முதல் பியலாக பிபர்ஜாய் புயல் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறவிருக்கிறது.

இந்த புயல் சின்னம் காரணமாக, மிக மெதுவாக, கேரளத்தில் மழைக்காலம் தொடங்குகிறது என்றும், தெற்கு தீபகற்பப் பகுதியில் கோடைக்காலம் பலமிழக்கலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகியிருக்கும் பிபர்ஜாய் புயலானது தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

காலை 8.30 மணி நிலவரப்படி, கோவாவிலிருந்து 890 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த புயல் சின்னம் தீவிரப் புயலாக மாறுவதால், நிலப்பரப்பில் பருவமழைக் காலம் தொடங்கி தீவிரமடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, தென்மேற்கு பருவமழை கேரளத்தில் ஜூன் 1ஆம் தேதி வாக்கில் தொடங்குவது வழக்கம். ஆனால், 7 நாள்கள் தாமதமாகத்தொடங்குகிறது. வழக்கமான தாமத தேதியையும் தாண்டி மேலும் 3 நாள்கள் தாமதமாக இந்த ஆண்டு பருவமழைத் தொடங்குகிறது.

பிபர்ஜாய் என்ற பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் டிஸாஸ்டர், தமிழில் பேரழிவு அல்லது பேரிடர் என்று பொருள். இது வெள்ளியன்று அதி தீவிர புயலாக மாறும் என்பதால், பெயருக்கு ஏற்றதுபோல பேரழிவை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT