இந்தியா

அரபிக் கடலில் உருவானது பைபார்ஜாய் புயல்!

DIN

அரபிக் கடலில் பைபார்ஜாய் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று புதன்கிழமை காலை வடக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘பைபார்ஜாய்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 900 கீ.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணிநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT