இந்தியா

தீவிரப் புயலாக வலுப்பெற்றது பைபார்ஜாய்!

7th Jun 2023 09:58 AM

ADVERTISEMENT

அரபிக் கடலில் உருவாகிய பைபார்ஜாய் புயல் தீவிரப் புயலாக வலுபெற்றுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று புதன்கிழமை காலை வடக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘பைபார்ஜாய்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 890 கீ.மீ. தொலைவில் தீவிரப் புயலாக தற்போது வலுபெற்றுள்ளது. தொடர்ந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் அதி தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT