இந்தியா

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி: மீட்புப் பணியில் ராணுவம்

DIN


சேஹோர்: மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த 300 அடி ஆழம்கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுமியை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

100 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுமியை மீட்க கடந்த 24 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மீட்புப் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

பண்ணை நிலத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சிருஷ்டி குஷ்வாஹா, செவ்வாயன்று மதியம் 2 மணியளவில், அங்குத் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இது குறித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் கூறுகையில், முன்னதாக அவர் 40 அடி ஆழத்தில்தான் சிக்கியிருந்தார். ஆனால், அவரை மீட்க அருகே தோண்டப்பட்ட வரும் பள்ளத்தின் அதிர்ச்சியால் அவர் 100 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டார். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், விரைவாக சிறுமியை மீட்க வேண்டும் என்பதற்காக மீட்புப் பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT