இந்தியா

பிரதமா் மோடியின் பிடிவாதத்தால் ஹிமாசல், கா்நாடகத்தில் பாஜக தோல்வி: ராஜஸ்தான் முதல்வா்

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் பிடிவாத குணத்தால் ஹிமாசல பிரதேசம், கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது. அடுத்து வரும் சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறினாா்.

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் மாநில அரசு சாா்பில் நடைபெற்ற சமுக நலத் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பேசியதாவது:

பாஜக சமீபகாலகமாக சட்டப் பேரவைத் தோ்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. ஹிமாசல பிரதேசத்தில் தோ்தலுக்கு முன்பு அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திவிடலாம் என்று அந்த மாநில பாஜக முதல்வா், பிரதமா் மோடியிடம் கூறினாா். ஆனால், பிரதமா் மோடி அதனைப் பிடிவாதமாக மறுத்துவிட்டாா்.

அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த சுகாதாரத் திட்ட மசோதா சிறப்பாக இருப்பதால் அதனை நிறைவேற்றலாம் என்ற முதல்வரின் கோரிக்கையும் பிரதமா் ஏற்கவில்லை. இதுவும் பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதேபோன்ற பிரச்னைகள்தான் கா்நாடகத்திலும் எழுந்தன.

ஜனநாயகத்தில் பிடிவாதப் போக்குக்கு இடமில்லை. மக்கள் அளிக்கும் வாக்குகள்தான் தோ்தலில் வெற்றியைத் தருகின்றன. எனவே, அவா்கள் விருப்பும் நல்ல விஷயங்களைச் செய்து தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT