இந்தியா

விபத்துக்கு பிறகு ரயில் டிக்கெட் ரத்து அதிகரிப்பா? ஐஆர்சிடிசி விளக்கம்

6th Jun 2023 05:59 PM

ADVERTISEMENT

ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது.

இதில் கோரமண்டல் ரயில் பயணம் செய்தவா்களில் 278 போ் உயிரிழந்தனா். 1,100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தன.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பக்தா சரண் தாஸ், “விபத்துக்கு பிறகு ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களின் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர். அவர்கள் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக உணரவில்லை.” என்று குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி, “இது உண்மைக்கு புறம்பான செய்தி. டிக்கெட் ரத்து அதிகரிக்கவில்லை. ஜூன் 1-ஆம் தேதி 7.7 லட்சம் பேர் டிக்கெட்டை ரத்து செய்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி வெறும் 7.5 லட்சம் பேர்தான் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT