இந்தியா

ஒரு உடலுக்கு உரிமைகோரிய இரண்டு குடும்பம்; இறுதியில்?

6th Jun 2023 01:32 PM

ADVERTISEMENT


ஹௌரா: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் ஒருவரின் உடலை இரண்டு குடும்பத்தினர் தங்கள் உறவினர் என்று உரிமைகோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிசா ரயில் விபத்தில் பலியான 275 பேரில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் உள்ளது.

இதற்கிடையே, ஜஹாங்கீர் (42), அஞ்ஜருல் (41) என்ற இருவர் இந்த ரயில் விபத்தில் இறந்துவிட்டனர். இவரது குடும்பத்தினரும் பலியானவர்களின் உடலைத் தேடும் போது ஒரே உடலை இரண்டு குடும்பத்தினரும் உரிமை கோரியிருந்தனர். இருவருமே விபத்தின்போது ஒரே விதமான ஆடை அணிந்திருந்ததே இந்த குழப்பத்துக்குக் காரணம்.

பலியான ஜஹாங்கீரின் உடல் அழுகி, பல இடங்களில் காயத்துடன் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு இருந்தது. உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

உடலை எடுத்துக் கொண்டு அவர்கள் புவனேஸ்வரம் புறப்பட்டோம். கட்டாக் சென்று கொண்டிருந்தபோது, காவல்துறையினர் எங்களை கைப்பேசியில் அழைத்து, வேறொரு குடும்பம் இந்த உடலை உரிமைகோருவதாகவும், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று மரபணு சோதனை செய்யமாறு அறிவுறுத்தினர்.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே, காவல்துறையினர் எங்களை அழைத்து, அவர்கள் தவறாகக் கூறிவிட்டதாகச் சொல்லி எங்களை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர்.

வீட்டுக்கு எடுத்துவந்து திங்கள்கிழமை இரவு இறுதிச் சடங்குகளை நடத்தினர் ஜஹாங்கீர் குடும்பத்தினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT