இந்தியா

திரிணமூல் காங்கிரஸ்: கட்சி அல்ல, தனியார் நிறுவனம் -சுவேந்து அதிகாரி

6th Jun 2023 09:29 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், கட்சி அல்ல தனியார் நிறுவனம் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிணமூல் காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல, தனியார் நிறுவனம். அதன் தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார். மேலாண்மை இயக்குநராக அபிஷேக் பானர்ஜி இருந்து வருகிறார். பேராசிரியர் சுகதா ராய் அதன் ஊழியர். 

ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று இன்று (ஜூன் 6) சந்தித்தார். அதனை விமர்சித்த சுவேந்து அதிகாரி,

ADVERTISEMENT

புகைப்படம் எடுத்துக்கொள்ள மம்தா பானர்ஜி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.  மேற்கு வங்கத்தில் எந்த அடிப்படை மருத்துவ வசதியும் இல்லை.

ரயில் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தினரை கொல்கத்தாவிலுள்ள நேதாஜி உள் விளையாட்டு அரங்குக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி நீண்ட உரையாற்றி, அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் காசோலையை வழங்குவார். விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தினரை வரவழைப்பது அவமானகரமான செயல் என விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT