இந்தியா

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் குண்டு இருப்பதாகப் புரளி: அதிகாரிகள் சோதனை!

6th Jun 2023 12:03 PM

ADVERTISEMENT

 

கொல்கத்தாவின் என்.எஸ்.சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

லண்டனுக்கு செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானம் 541 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.29 மணிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதையடுத்து, விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

படிக்க: ஒடிஸா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 101  உடல்கள்!

ADVERTISEMENT

விமானக் குழுவினர் உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் விமானத்தில் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை. 

இதன்பின்னர், கூச்சலிட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT