ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பிகார் பேரழிவு மேலாண்மைத் துறையின் தகவலின்படி,
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். 22 பேர் மாயமாகியுள்ளனர்.
இறந்தவர்களில் ஒன்பது பேர் முசாபர்பூர் மாவட்டம், மதுபானி- 7, பகல்பூர் -4, பூர்னியா மற்றும் கிழக்கு சாம்பரான் -2 தலா, நவாடா -2, மேற்கு சாம்பாரன் -2, தர்பங்கா -2, ஜமுய் -2, சமஸ்திபூர் -1, பாங்கா -1 மற்றும் பெக்சாராரை -1 என அடையாளம் காணப்பட்டுள்ளன.
நகம் அடிக்கடி உடைகிறதா? அதற்குக் காரணம் இதுதான்!
பாலாசோர், பத்ராக் மற்றும் கட்டாக் ஆகிய வெவ்வேறு மருத்துவமனைகளில் காயமடைந்த 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 110ஐக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.