ஒடிஸா ரயில் விபத்தில் பலியான 275 பேரில் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது.
இந்த விபத்தில் கோரமண்டல் ரயில் பயணணம் செய்தவா்களில் 275 போ் உயிரிழந்தனா். 1,100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தன.
இந்த நிலையில், பலியான 275 பேரில் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் ஒடிஸாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அடையாளம் காணப்பட்ட 80 உடல்களில், 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது.