இந்தியா

இலவச மின்சாரம் யாருக்கு? கர்நாடக அரசு விளக்கம்

DIN


ஜூலை 1 முதல், 200 யூனிட் இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கும் நிலையில், அதற்கான விதிமுறைகள் குறித்து மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.

கிரஹ ஜோதி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டம் குறித்து கூறப்பட்டிருப்பதாவது,

கர்நாடக மக்கள், சேவா சிந்து இணையதளம் வாயிலாக தேவையான ஆவணங்களுடன் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்தாத வகையிலும், அதிகபட்ச மக்களுக்கு சென்று சேரும் வகையிலும் செயல்படுத்த வேண்டும். 

இந்த 200 யூனிட் இலவச மின்சார திட்டம் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்துக்காக, வாடிக்கையாளர் எண்ணுடன், வங்கியின் நுகர்வோர் எண் மற்றும் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைக்க வேண்டும். அது மட்டுமல்ல, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மின் கட்டணம் நிலுவையில் இல்லாதவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT