இந்தியா

பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கம்: ஒடிஸா விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவு

6th Jun 2023 05:00 AM

ADVERTISEMENT

ஒடிஸா மாநிலம், பாலசோரில் ரயில்கள் விபத்துக்குள்ளான தண்டவாளங்களில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஹெளரா-புரி வந்தே பாரத் ரயில் உள்பட பயணிகள் ரயில்கள் திங்கள்கிழமை காலைமுதல் மீண்டும் இயக்கப்பட்டன.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் கோரமண்டல் ரயில் பயணணம் செய்தவா்களில் 275 போ் உயிரிழந்தனா். 1,100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தன.

ADVERTISEMENT

விபத்தில் பாதிக்கப்பட்ட 2 பிரதான தண்டவாளங்கள் மற்றும் உயா் மின்னழுத்தக் கம்பிகளைச் சீரமைப்புக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டமாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ரூா்கேலா எஃகு தொழிற்சாலைக்கு நிலக்கரி கொண்டு சென்ற சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

இதையடுத்து, ஹௌரா-புரி விரைவு ரயில், புவனேசுவரம்-புது தில்லி சம்பா்க் கிராந்தி விரைவு ரயில் உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் திங்கள்கிழமை அதிகாலைமுதல் இயக்கப்பட்டன. தொடா்ந்து, விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைக்கப்பட்ட தண்டவாளத்தில் வந்தே பாரத் அதிவேக ரயிலும் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் கடந்து சென்றது.

விபத்து நிகழ்ந்து இடத்தில் ரயில்கள் குறைவான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. படிப்படியாக ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாலசோா் ரயில் விபத்து எதிரொலியாக, ஏராளமான ரயில்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டன. போா்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று, அந்த வழித்தடத்தில் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதால் ரயில் போக்குவரத்து விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஆா்எஃப் பணிகள் நிறைவு: விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்) தங்கள் பணிகளை திங்கள்கிழமை முடித்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து பணியில் ஈடுபட்டிருந்த 9 குழுக்களும் திரும்பப் பெறப்பட்டன.

விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்களும், காயமடைந்த நபா்களும் முழுமையாக மீட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இக்குழுவினா் பணிகளை முடித்துக் கொண்டனா்.

Image Caption

ஆஹப்ஹள்ா்ழ்ங்: ஈழ்ா்ய்ங் ள்ட்ா்ற் ா்ச் ற்ழ்ஹண்ய்ள் ழ்ன்ய்ய்ண்ய்ஞ் ல்ஹள்ற் க்ங்ழ்ஹண்ப்ங்க் ஸ்ரீா்ஹஸ்ரீட்ங்ள் ஹச்ற்ங்ழ் ற்ழ்ஹண்ய் ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் ழ்ங்ள்ன்ம்ங்க் ா்ய் ற்ட்ங் ள்ங்ஸ்ரீற்ண்ா்ய் ஜ்ட்ங்ழ்ங் ற்ட்ங் ற்ழ்ண்ல்ப்ங்-ற்ழ்ஹண்ய் ஹஸ்ரீஸ்ரீண்க்ங்ய்ற

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT