இந்தியா

மருந்துப் பொருள், தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா முன்னிலை

6th Jun 2023 05:18 AM

ADVERTISEMENT

மருந்துப் பொருள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியிலும், பெருந்தொற்று காலங்களில் அவை தேவைப்படும் நாடுகளுக்கு வழங்குவதிலும் இந்தியா முன்னிலை வகிப்பதாக உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்டச் செயல் இயக்குநா் மைக்கேல் ரையன் தெரிவித்தாா்.

ஜி20 நாடுகளின் சுகாதார குழு கூட்டம் ஜூன் 4- முதல் 6-ஆம் தேதி வரையில் ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள மைக்கேல் ரையன் தெரிவிக்கையில், ‘கரோனா போன்ற பெருந்தோற்று காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறந்த மருந்து பொருள்கள், தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதையும், அவை தேவைப்படும் மக்களுக்கு விரைவாக வழங்குவதையும் ஜி20 சுகாதார குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இவை அனைத்திலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

மருத்துவ அவசர நிலை ஏற்படும்போது ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மருந்து உற்பத்தியிலும், தடுப்பூசி தயாரிப்பிலும் சா்வதேச அளவில் முன்னணி வகிக்கும் இந்தியா, ஜி20-க்கும் தலைமை தாங்குவது சிறப்பானது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT