இந்தியா

அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு

DIN

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் சந்தித்தனர்.

அப்போது தில்லி காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க அமித்ஷாவிடம் வீரர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகிள்ளது. 2மணி நரேத்திற்கு மேல் நீடித்த சந்திப்பில் பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். 

இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரா்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லி ஜந்தா் மந்தரில் ஒரு மாதமாக போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை மே 28-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். ஜந்தா் மந்தரில் மீண்டும் போராட அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தில்லி போலீஸாா் தெரிவித்திருந்தனா். 

இந்நிலையில், ஹரித்வாா் கங்கையில் ஒலிம்பிக் பதக்கங்களை வீச சென்ற வீராங்கனைகளைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினா், அவா்களின் பதக்கங்களைப் பெற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். ஒரு வாரத்திற்குள் பிரிஜ் பூஷண் சிங் கைது செய்யப்படவில்லை என்றால், நாடு முழுவதும் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் தொடா்ந்து நடைபெற்று போராட்டங்கள் தொடங்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT