இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: 2 ரயில் பாதைகளில் ரயில்கள் இயக்கப்பட்டன

5th Jun 2023 09:09 AM

ADVERTISEMENT

ஒடிசாவில் விபத்து நிகழ்ந்த பஹாநக பஜார் ரயில் நிலையத்தில் 2 ரயில் பாதைகளில் ரயில்கள் இயக்கப்பட்டன. 

சீரமைப்பு பணிகள் முடிந்து டவுன், அப் லைன்களில் சோதனை முறையில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்றிரவு 10.45 மணிக்கு டவுன் லைன்னிலும் 12 மணிக்கு அப் லைன்னிலும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. லூப் சாலையில் சீரமைப்பு நடைபெற்று வரும் நிலையில் முழு பணிகளும் 2 நாட்களில் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘பாலசோரில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10.40 மணியளவில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் ரயிலாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஒடிஸாவில் உள்ள ரூா்கேலா இரும்பு ஆலையை நோக்கி நிலக்கரி ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் சென்றது. 

ADVERTISEMENT

பெங்களூரு-ஹெளரா ரயில், விபத்தில் சிக்கிய அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயில் போக்குவரத்தை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்’ என்று தெரிவித்தனா். அதேசமயம் ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று இயக்கப்படுகிறது. 

காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.45 மணிக்கு தாமதமாக செல்கிறது. ரயில் விபத்து நடந்த 51 மணிநேரத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT