இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை

5th Jun 2023 08:43 AM

ADVERTISEMENT

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை நடத்துகிறார். 

கராக்பூரில் விசாரணை நடத்தும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் விபத்து பற்றி மக்கள் தகவல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து இன்றும் நாளையும் விசாரணை நடத்தும் தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பின்னர் அதுதொடர்பாக அறிக்கை அளிக்க உள்ளார்.

இதனிடையே ஒடிஸாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

அதேசமயம் ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று இயக்கப்படுகிறது.  காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.45 மணிக்கு தாமதமாக செல்கிறது.

ADVERTISEMENT

ஒடிஸா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹௌரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT