இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: ரயில் ஓட்டுநர்கள் எப்படியிருக்கிறார்கள்?

5th Jun 2023 05:48 PM

ADVERTISEMENT


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சிக்கிய ரயில்களின் ஓட்டுநர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, இரண்டு விரைவு ரயில்களின் ஓட்டுநர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், ஒரு ரயில் ஓட்டுநர் மொஹாந்தி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து திங்கள்கிழமை மாற்றப்பட்டுவிட்டதாகவும் மற்றொரு ரயில் ஓட்டுநர் பெஹேராவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவைசிகிச்சை நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளராக மொஹாந்தி, பெஹேரா இருவரும் புவனேஸ்வரத்தில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறறு வருகிறார்கள். 

தங்களது தனியுரிமையைப் பாதுகாக்குமாறும், ஓட்டுநர்கள் இருவரும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் குணமடைந்து வருவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும், இந்த விபத்துக்கு, ரயில் ஓட்டுநர்களை குற்றம்சாட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரயில் ஓட்டுநர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT