இந்தியா

ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அமைச்சர் வேண்டுகோள்!

5th Jun 2023 07:04 PM

ADVERTISEMENT


ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் அரசு அறிவித்துள்ள இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரிக்கை வைத்துள்ளார். 

ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்தனர். 1199 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 151 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்புப் பணிகள் நேற்று இரவு முழுமையடைந்தது. ரயில்கள் வழக்கம்போல் அப்பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திரனரை தொடர்புகொள்வதே எங்களுடைய இன்றைய நோக்கமாக இருந்தது. விபத்துக்குள்ளான ரயிலில் சென்றவர்களின் குடும்பத்தினர் அரசு அளித்துள்ள இலவச எண்ணில் தொடர்புகொண்டு பேச வேண்டும். அப்படி செய்தால் அரசுக்கு உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT