இந்தியா

மீண்டும் ஒடிசா செல்கிறார் மம்தா பானர்ஜி!

5th Jun 2023 05:45 PM

ADVERTISEMENT

ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் மற்றும் புவனேஸ்வர் நகரங்களுக்கு  மம்தா செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் சென்று வழங்கவுள்ளார்.

மேலும், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணி நியமன கடிதங்களை புதன் கிழமை மம்தா பானர்ஜி வழங்கவுள்ளார். 

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த மூன்று ரயில் விபத்தில் இன்று காலை வரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும், ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த அஸ்வின்! 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT