இந்தியா

ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து: சரக்கு ரயில் தடம்புரண்டது

DIN


கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான ஒடிசா மாநிலத்தின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயில்களின் ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு நகர்ந்துவிட்டதாகவும், சம்பவப் பகுதிக்கு காவல்துறையினரும், ரயில்வே துறையினரும் விரைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர சம்பவத்தில் கடுமையான உயிா்ச் சேதங்கள் ஏற்பட்டன. ஏராளமானோர் காயமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

SCROLL FOR NEXT