இந்தியா

சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: 2 ராணுவ வீரர்கள் காயம்!

5th Jun 2023 01:32 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ படையைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். 

காயமடைந்த ராணுவ வீரர்கள் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு விமானம் மூலம் ராய்பூர் கொண்டுசெல்லப்பட்டனர். 

படிக்க: பொறியியல் கலந்தாய்வு: நாளை ரேண்டம் எண் வெளியீடு!

ADVERTISEMENT

சிஆர்பிஎஃப் குழு புஸ்னார் முகாமில் இருந்து ஹிரோலிக்கு சென்றபோது நக்சல்கள் புதைத்துவைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் தக்மெட்டா மலை அருகே கங்கலூர் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து, மாவட்ட ரிசர்வ் காவலர்(டி.ஆர்.ஜி), சம்பவம் நடைபெற்ற இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT