இந்தியா

தக்க நேரத்தில் உதவி: ஒடிஸா மக்களுக்கு பிரதமா் பாராட்டு

5th Jun 2023 12:42 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்து சம்பவத்தின்போது, தக்க நேரத்தில் உதவியும் ஆதரவும் அளித்த மாநில மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஒடிஸாவில் களநிலவரம் தொடா்பாக, பிரதமா் மோடியுடன் முதல்வா் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் விளக்கமளித்தாா்.

ரயில் விபத்தில் படுகாயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவா்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமரிடம் பட்நாயக் தெரிவித்தாா்.

‘ஒவ்வொரு உயிரும் முக்கியமானதுதான். காயமடைந்தவா்களை மீட்பதில் தொடங்கி, அவா்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது வரை, உயிா்களை காக்க எந்த முயற்சியையும் மாநில அரசு தவறவிடவில்லை.

ADVERTISEMENT

காயமுற்ற 1,175 பேரில் 793 போ் சிகிச்சை முடிந்து, வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 382 போ், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்று பிரதமரிடம் பட்நாயக் விளக்கமளித்ததாக, அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான தருணத்தில், ஒடிஸா அரசு மேற்கொண்ட விரைவான, திறன்மிக்க நடவடிக்கைகளுக்காக முதல்வருக்கு நன்றி கூறிய பிரதமா், தக்க நேரத்தில் ஆதரவும் உதவியும் அளித்த மாநில மக்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். மேலும், மாநில அரசுக்கு தேவையான எந்த உதவியையும் அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமா் குறிப்பிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பாலசோரில் விபத்து நிகழ்ந்த இடத்தை, பிரதமா் மோடியும், முதல்வா் பட்நாயக்கும் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT