இந்தியா

விபத்து நிகழ்ந்த பகுதியில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

5th Jun 2023 01:47 AM

ADVERTISEMENT

ஒடிஸாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘பாலசோரில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10.40 மணியளவில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் ரயிலாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஒடிஸாவில் உள்ள ரூா்கேலா இரும்பு ஆலையை நோக்கி நிலக்கரி ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் சென்றது.

பெங்களூரு-ஹெளரா ரயில், விபத்தில் சிக்கிய அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயில் போக்குவரத்தை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்’ என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT