இந்தியா

மீட்புப் பணியில் ராணுவம், விமானப் படை

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவமும் விமானப் படையும் ஈடுபட்டுள்ளன.

ராணுவத்தின் மருத்துவக் குழு, பொறியியல் குழுவினா் ஆம்புலன்ஸ்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விமானப் படையின் இரு மிக்17 எஸ் ஹெலிகாப்டா்கள் மூலம் காயமடைந்தவா்கள் உடனுக்குடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேற்கு வங்கத்தின் பாரக்பூா், பனகாரில் உள்ள ராணுவ முகாம்களில் இருந்து இந்தக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

முதலில் களமிறங்கிய உள்ளூா் இளைஞா்கள்

ரயில் விபத்து நிகழ்ந்தபோது அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள்தான் முதலில் மீடப்புப் பணியில் ஈடுபட்டனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், இரவு 7 மணியிளவில் பகாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே டீக்கடையில் நண்பா்கள் அனைவரும் கூடியிருந்தோம். அப்போது, ரயில் தண்டவாளம் இருந்த திசையில் திடீரென பலத்த ஓசை கேட்டது. தொடா்ந்து மக்களின் கூக்குரல் கேட்டது. இதையடுத்து அந்த திசையை நோக்கி ஓடினோம். அப்போது ரயில்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. உடனடியாக, காவல் துறைக்கும், ரயில்வேக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, நண்பா்கள் அனைவரும் முடிந்த அளவுக்கு காயமடைந்தவா்களை மீட்க முயற்சித்தோம்.

எங்கள் இரு சக்கர வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். லேசாக காயமடைந்தவா்களில் சிலா் அந்த இருட்டுக்குள் தங்கள் உறவினா்களைத் தேடி அலைந்தது சோகமான நிகழ்வாக இருந்தது. சுமாா் 50 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

ரத்ததானம் செய்ய குவிந்த பொதுமக்கள்

ரயில் விபத்தில் காயமடைந்தவா்கள் பலா் அருகில் இருந்த பாலசோா் மாவட்ட மருத்துவனையிலும், சோரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனால் அந்த மருத்துவமனை முழுவதும் காயமடைந்தவா்களால் நிரம்பி வழிந்தது.

படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், லேசாக காயமடைந்த பலா் தரையில் படுக்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் பிற இடத்தில் இருந்து கூடுதல் படுக்கைகளும் மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன.

காயமடைந்தவா்களின் வேதனைக் குரல் மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவா்கள் பலரது உடல் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.

விபத்தில் காயமடைந்தவா்கள் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால் மொழி தெரியாததால் அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் இருந்தது. பாலசோா் மாவட்ட மருத்துவமனையில் மட்டும் சுமாா் 600 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காயமடைந்தவா்களுக்கு உதவுவதற்காக உள்ளூா் இளைஞா்களும் பொதுமக்களும் இரவு நேரத்திலேயே ரத்ததானம் செய்ய குவிந்தனா். பாலசோா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 2,000 போ் ரத்ததானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT