இந்தியா

ஒடிசா விபத்துக்கான காரணம் தெரிந்தது! ஜூன் 6 முதல் மீண்டும் ரயில் சேவை!!

DIN

ஒடிசா மாநிலம் பாலாசோரில் விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் வரும் புதன்கிழமை ஜூன் 6ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாள சீரமைப்புப் பணிகளை மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். 

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடைபெற்ற இடத்தை நேற்று பார்வையிட்டார். சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சீரமைப்புப் பணிகளை இன்று முழுவதுமாக முடிப்போம். ரயில் விபத்தில் சிக்கிய உடல்கள் அனைத்தும் இங்கிருந்து மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடித்து வரும் புதன்கிழமைக்குள் ரயில் சேவையை இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

விபத்துகான காரணம்

சிக்னலுக்கான மின்னணு அமைப்பில் (மின்னணு இன்டர்லாக்) மாற்றம் ஏற்பட்டதால், விபத்து ஏற்பட்டதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு தண்டவாளத்தை மாற்று வழித்தடத்துக்காக மற்றொரு தண்டவாளத்துடன் இணைப்பதற்கான பணியை செய்ய மின்னணு இன்டர்லாக் பயன்படுத்தப்படுகிறது. முன்பு மனித ஆற்றல் மூலம் இப்பணி செய்யப்பட்டு வந்தது. தற்போது தானியங்கி முறையில் நடைபெறுகிறது. 

3 ரயில்கள் மோதி விபத்து

ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 290 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி

சித்திரை பெருவிழா: பால்குட ஊா்வலம்

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

SCROLL FOR NEXT