இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: தண்டவாள சீரமைப்புப் பணிகள் தீவிரம்

4th Jun 2023 09:44 AM

ADVERTISEMENT


ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் தண்டவாளம் சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ரயில் விபத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் புதன்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

பாலாசோர் மாவட்டத்திலுள்ள பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. 

ADVERTISEMENT

அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்தது.

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 290 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. ரயில் பெட்டிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளன. 7 பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து மீட்பு ரயில், 4 ரயில்வே கிரேன்கள் ஆகியவைகொண்டு சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்த பணிகள் முடிந்த பின்னர், வரும் புதன்கிழமை முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT