இந்தியா

ஒடிசா ரயில் விபத்தில் 275 போ் பலி:  ஒடிசா தலைமைச் செயலாளர் விளக்கம்

4th Jun 2023 08:12 PM

ADVERTISEMENT


புவனேசுவரம்: ஒடிசா ரயில் விபத்தில் 288 போ் பலியானதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை 275 என அம்மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டுள்ளதாகவும், உண்மையில் பலி எண்ணிக்கை 288 அல்ல, 275 பேர் பலியானதாக அம்மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

தலைமைச் செயலாளா் பி.கே.ஜெனா கூறியதாவது:

பாலசோா் மாவட்ட ஆட்சியரின் சரிபாா்ப்பு நடவடிக்கைக்கு பின் பலி எண்ணிக்கை 275 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற சரிபார்ப்பில், சில சடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பலியானோரின் எண்ணிக்கை 275 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலியானோரின் சடல்களில் 88 பேரின் சடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 78 சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 187 சடல்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. சடல்களை அடையாளம் காணப்படுவது சவாலாக உள்ளது. பலியானோரின் புகைப்படங்கள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், காயமடைந்த 1,175 பேரில் 793 போ் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மற்றவா்களுக்கு சோரோ, பாலசோா், பத்ராக், கட்டாக் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக அவர் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT