இந்தியா

200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு

4th Jun 2023 11:09 AM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 

இறந்த 290 பேரில் கிட்டத்தட்ட 70 - 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர். 

மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT