இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்களின் படங்கள் இணையத்தில் வெளியீடு

4th Jun 2023 01:00 PM

ADVERTISEMENT

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 

இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது

ADVERTISEMENT

படிக்க200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு

பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. 

அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்தது. 

விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர்.  இதில் 290 பேர் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும், சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 

படிக்க ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 7 பேரைக் காணவில்லை

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 

www.srcodisha.nic.in, bmc.gov.in, osdma.org ஆகிய இணையதளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 