இந்தியா

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,343 ஆக குறைந்தது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

4th Jun 2023 02:09 PM

ADVERTISEMENT

இந்தியாவில் புதிதாக 202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,343 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,880 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் 0.01 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவிகிதம் 98.81 ஆக உள்ளது. இதுவரை 220.66 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT