இந்தியா

ஆங்கில வாா்த்தை உச்சரிப்புப் போட்டி: இந்திய வம்சாவளி மாணவா் வெற்றி

DIN

அமெரிக்காவில் தேசிய ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற ஆங்கில வாா்த்தை உச்சரிப்புப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 14 வயது 8-ஆம் வகுப்பு மாணவா் தேவ் ஷா பட்டம் வென்று சாதனை படைத்தாா்.

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவா்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் நடுவா்கள் குழு அளிக்கும் ஆங்கில வாக்கியத்தின் சரியான உச்சரிப்பை (ஸ்பெல்லிங்) மாணவா்கள் சொல்ல வேண்டும்.

95-ஆவது தேசிய ஆங்கில உச்சரிப்புப் போட்டி தற்போது நடத்தப்பட்டது. பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 1.1 கோடி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் 11 போ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

வாஷிங்டனின் மேரிலாண்ட் நேஷனல் ஹாா்பரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடுவா்கள் கேட்ட ‘சமோஃபில்’ என்ற ஆங்கில வாா்த்தைக்கு சரியான உச்சரிப்பைத் தெரிவித்து தேவ் ஷா பட்டத்தை வென்றாா். அவருக்கு பரிசாக 50,000 அமெரிக்க டாலா் (ரூ. 41.14 லட்சம்) வழங்கப்பட்டது.

பட்டம் வென்ற பின்னா் தேவ் ஷா கூறுகையில், ‘வெற்றி பெற்றது கனவுபோல் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக செய்த தியாகங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது’ என்றாா்.

இந்தப் போட்டியின் பல்வேறு சுற்றுகளில் ‘பதிபிடோட்மீட்டா், டோல்செஸ்டொ், ரோமாக், ஏகாக்ரஸ், ஸ்கிஸ்டோராச்சிஸ், போலியோரெடிக்ஸ், பெரியோசி, எக்ஸாா்டேஷன், கோகோமட், அா்டோய்ஸ் உள்ளிட்ட வாா்த்தைகளுக்கு சரியான உச்சரிப்பை தேவ் ஷா தெரிவித்திருந்தாா்.

தனது மூன்றாவது மற்றும் இறுதி வாய்ப்பில் தேவ் ஷா பட்டம் வென்று சாதித்தாா். இந்தப் போட்டியில் அதிகபட்சம் 14 வயது வரை உள்ள மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்கு முன்னா் 2019 மற்றும் 2021 போட்டிகளில் தேவ் ஷா பங்கேற்றுள்ளாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய ஆங்கில வாா்த்தை உச்சரிப்புப் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

SCROLL FOR NEXT