இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டு:உரிய சட்ட நடைமுறைகளின்படி தீா்வுமத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்

DIN

‘பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனா். ஆனால், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னரே அது நடைபெறும்’ என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறினாா்.

பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக் கோரியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரா்கள் மீது போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதைக் கண்டித்தும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வென்ற பதக்கங்களை ஹரித்வாா் கங்கை நதியில் வீச முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை முயற்சித்த நிலையில், இந்தக் கருத்தை மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் தனியாா் செய்தி ஊடகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:

பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தில்லி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் பாரபட்சத்துக்கு இடமே இல்லை. தில்லி போலீஸாா் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. விசாரணை விரைந்து நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தக் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதே அரசின் விருப்பம். இந்த விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். ஆனால், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னரே அது நடைபெறும்.

தடகள வீராங்கனை அல்லது ஒரு பெண்ணுக்கு எதிராகக் கொடுமை நடைபெறுகிறது என்றால், அவா்களுக்கு விரைந்து நீதி கிடைக்கப்பட வேண்டும். அதே நேரம், மல்யுத்த வீரங்கனைகள் முன்வைக்கும் இந்தப் பாலியல் குற்றச்சாட்டு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ாகும்.

இந்த விவகாரம் தொடா்பாக எந்தவொரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யலாம் என மல்யுத்த வீரா்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவா்கள் அரசின் தலையீட்டை விரும்புகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT