இந்தியா

விபத்து நடந்த பகுதி எப்படியிருக்கிறது?

DIN


பாலாசோர்: ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான பகுதியைப் பார்ப்பதற்கு ரயில் பெட்டிகள் சூறாவளியில் தூக்கிவீசப்பட்டு, தண்டவாளங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பது போல காணப்படுகிறது.

சில ரயில் பெட்டிகள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து வெறும் இரும்புக் கூழாகக் காணப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 238 பேர் பலியாகினர். 900 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த இடத்துக்கு அருகே இருக்கும் ஒரு உயரமான பகுதியிலிருந்து விபத்துப் பகுதியைப் பார்க்கும்போது, ஏதோ ஒன்று, ரயில் பெட்டிகளை சூறையாடி தூக்கி எறிந்தது போல காணப்படுகிறது. விபத்துப் பகுதியிலிருந்து வரும் புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் எரிவாயு மூலம் வெட்டும் கருவிகளைக் கொண்டு நசுங்கிய ரயில் பெட்டிகளை அறுத்து அதனுள் நுழைந்து, யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதைத் தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் ஆம்புலன்ஸ்களின் சப்தத்தால் அப்பகுதியே ஸ்தம்பித்துப்போயிருந்தது.

ரயில்பெட்டிகளை அறுக்கும் சப்தம், ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி, காவல்துறையினரின் விசில் சப்தம் என நெஞ்சை பிழியும் ஒலிகளாகவே நிறைந்திருப்பதாக மீட்புப் பணியை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறியிருக்கிறது. ஆனால், விபத்துப் பகுதியல் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு பகுதியையும் முற்றிலும் தேடி, அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்ய இன்னமும் 3 அல்லது 4 மணி நேரங்கள் ஆகும் என்று ஒடிசா முதன்மைச் செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.

பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 1,200 வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க போக்குவரத்துத் துறை பேருந்துகளும் விபத்துப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன.

சில சிதிலமடைந்த உடல்கள் ஆங்காங்கே கிடந்ததைப் பார்க்கவே கோரமாக இருந்ததாக, விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT