இந்தியா

விபத்துப் பகுதியில் தேடுதல் பணி இன்று மாலை முடியலாம்: பேரிடர் மீட்புப் படை

DIN


புது தில்லி: ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் பயணிகள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணி இன்று மாலைக்குள் முடியலாம் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், விபத்துப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துப் பகுதியில் கிட்டத்தட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 300 பேர், உலோகங்களை அறுக்கும் இயந்திரங்கள், மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு மீட்புக் கருவிகளுடன் பணியாற்றி வருவதாகவும், பயணிகள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணி இன்று மாலைக்குள் நிறைவுபெறும் என்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை 8.30 மணிக்கு படையின் முதல் குழுவினர் விபத்துப் பகுதிக்கு விரைந்தது முதல் இதுவரை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 44 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 77 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  300 படை வீரர்கள் ஒன்பது குழுக்களாகப் பிரிந்து பணியாற்றியுள்ளனர்.

தற்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் ரயில் பெட்டிகளுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 238 பேர் பலியாகினர். 900 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தமிழக பயணிகளை சென்னை அழைத்து வர சென்னையிலிருந்து சிறப்பு ரயில் புவனேஸ்வரம் செல்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT