ரயில் விபத்தில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்து உள்ளேன். இந்த ரயில் விபத்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்தாகும். எனக்கு தெரிந்த வரையில் ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி எதுவும் இல்லை, அந்தக் கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.
உயிரிழந்தவர்களை மீண்டும் பிழைக்க வைக்க முடியாது. மீட்பு நடவடிக்கையின் மூலம் இயல்பு நிலையை கொண்டு வர முடியும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை: விலை எவ்வளவு? எங்கு, எப்போது வாங்கலாம்?