வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள குகைக் கோயிலில் சனிக்கிழமை பிரதம் பூஜை நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா காணொலிக் காட்சி வயிலாக பிரதம் பூஜையில் பங்கேற்றார்.
சார்தாம் யாத்திரை எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், அமர்நாத் ஆகிய நான்கு புனித கோயில்களும் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் திறக்கப்பட்டு மக்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், இந்தாண்டு கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் கோயில்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 1 முதல் அமர்நாத் மலைக்கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
படிக்க: தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
உலகெங்கிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் அமர்நாத் யாத்திரை இந்தாண்டு பலத்த பாதுகாப்புடன் நடத்தத் திட்டமிட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சுமுகமான முறையில் அமர்நாத் யாத்திரை நிகழ அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
அமர்நாத் யாத்திரை இந்தாண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.