இந்தியா

200 பேர் பலி.. 900 பேர் காயம்.. 200 ஆம்புலன்ஸ்: மீட்புப் பணி தீவிரம்

3rd Jun 2023 03:10 AM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: ரயில் விபத்து: 120-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு

இந்த ரயில் விபத்தில் பலியான 200க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒடிசா தீயணைப்புத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 200 மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா கூறியுள்ளார். மேலும், மீட்புப் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT