இந்தியா

நாளை ஒடிசா செல்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 

DIN

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா நாளை ஒடிசா விரைகிறார். 

ஒடிசா செல்லும் அவர் புவனேஸ்வர் எஸ்ம்ஸ் மற்றும் கட்டக் மருத்துவக்கல்லூரி சென்று காயமடைந்தவர்களை சந்திக்கிறார். முன்னதாக இன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்துக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.  தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 56 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில்கள் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT