இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: ரத்த தானம் செய்ய மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்!

3rd Jun 2023 01:46 PM

ADVERTISEMENT

புவனேஷ்வர் (ஒடிசா): ஒடிசாவின் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய மருத்துவமனைகளுக்கு வெளியே பலர்   வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

கட்டாக்கின் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலர் ரத்த தானம் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

உள்ளூர்வாசியான சுதன்ஷு கூறுகையில், "காயமடைந்தவர்கள் இங்கு கொண்டு வரப்படுகிறார்கள். நான் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இளைஞர்கள் வந்து ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்".

"நான் ரத்த தானம் செய்தேன், எனது நண்பர்களும் ரத்த தானம் செய்தனர். அனைவரும் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குச் செல்ல நான் இறைவனை வேண்டுகிறேன்" என்று மற்றொரு உள்ளூர்வாசியான விபூதி ஷரன் கூறினார்.

ADVERTISEMENT

முன்னதாக, காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய பத்ரக் மற்றும் பாலசோரில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிக்க: விபத்து நடந்த பகுதி எப்படியிருக்கிறது?

ADVERTISEMENT
ADVERTISEMENT