இந்தியா

ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன: காங்கிரஸ்

3rd Jun 2023 04:28 PM

ADVERTISEMENT

ஒடிசா  ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் நிறைய கேள்விகள் கேட்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பது மற்றும் மற்றும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற உடனடி பணிகளுக்குப் பின்பு இந்த கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தக் கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம்!

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்று. இந்த தருணத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்யுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒடிசா விரைந்துள்ளனர். மேலும், பலரும் ஒடிசாவுக்கு செல்ல உள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் கேட்பதற்கு எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதே உடனடி கடமையாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலக இதுதான் காரணம்: டி.கே.சிவகுமார்

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் இதுவரை குறைந்தது 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT