இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: 6 ரயில்கள் ரத்து

3rd Jun 2023 07:34 PM

ADVERTISEMENT

ஒடிசா ரயில் விபத்து காரணமாக 6 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மங்களூருவிலிருந்து இன்று இரவு 11 மணிக்கு சந்திரகாச்சி செல்லும் விவேக் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு ஷாலிமர் புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாளை காலை  8.10 மணிக்கு சந்திரகாச்சி புறப்படும் ஏ.சி. விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தியில் இருந்து 6 ஆம் தேதி காலை 6.20க்கு பெங்களூரு செல்லும் வாராந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

7 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு காமாக்யாவிலிருந்து பெங்களூரு புறப்பட வேண்டிய விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 56 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில்கள் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிக்க: ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 288 ஆக உயர்வு!

ADVERTISEMENT
ADVERTISEMENT